Tuesday, December 02, 2008

477. கோவை: 3 தீவிரவாதிகள் கைது

. கோவை, டிச. 2: கோவை நகரில் 3 முஸ்லீம் தீவிரவாதிகள் சிக்கியுள்ளனர். அவர்கள் கோவை நகரை குண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.  தீவிரவாதிகளிடமிருந்து கோவை நகர வரைபடம், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
.
மும்பையில் தீவிரவாதிகள் தாஜ் ஓட்டல் உட்பட முக்கிய இடங்களில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர்.

தேசிய பாதுகாப்புப்படையின் அதிரடிப்படையினர் புகுந்து தாக்குதல் நடத்தி பிணைகைதிகளை மீட்டனர். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்ப்படுத்தப் பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவையில் ஒரு விடுதி ஒன்றில் சந்தேகத்திற்குரிய நபர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் வெளிநாடுகளில் உள்ள சிலரிடம் தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சென்னையில் இருந்து கோவை நகர காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.  இதனைத் தொடர்ந்து கோவை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், போலீசாரும், அதிரடிப்படையினரும் கோவை நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

கோவையில் லங்கா கார்னர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அதிரடிப்படையினர் சோதனை யிட்டனர். அங்கு உள்ள ஒரு அறையில் 3 பேர் பதுங்கியிருப்பதை அதிரடிப்படையினர் கண்டனர். துப்பாக்கி முனையில் அவர்களை சுற்றி வளைத்தினர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதனால் அவர்கள் மீது அதிரடிப்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  அவர்கள் மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசினார்கள்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சம்சுதீன் (வயது 23), இர்பான் அகமது (வயது 20), அப்துல் தமீம் (வயது 21) என்று தெரிய வந்தது. 3 பேரும் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

எர்ணாக்குளத்திலுள்ள எங்கள் தலைவர் கூறியபடி 3 பேரும் கொச்சி துறைமுகத்தில் இருந்து தனித்தனியாக பிரிந்து கோவை வந்தோம் என்று அவர்கள் கூறினார்கள்.

எதற்காக வந்தீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லாமல் மவுனம் சாதித்தனர். அவர்களிடமிருந்து கோவை நகர வரைபடம், ஒரு டைரி, 4 செல்போன்கள், 2 வில்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் கோவை நகரிலுள்ள முக்கிய இடங்கள், செல்போன் எண்கள் இருந்தன.

அவர்கள் வைத்திருந்த செல்போனை சோதனையிட்ட போது துபாய் மற்றும் அரபு நாடுகளுக்கு பேசியிருப்பது தெரியவந்தது. கோவை நகரை தகர்க்கும் சதித்திட்டத்துடன் அவர்கள் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இவர்கள் 3 பேரும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோவை வந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த 2 பேர் அவர்களுக்கு கோவை நகரை சுற்றி காண்பித்திருக்கிறார்கள். ரெயில் நிலையம், விமான நிலையம், கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், தலைமை டெலிபோன் அலுவலகம், அரசு மருத்துவமனை, உயரமான கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய இடங்களுக்கு சென்று இவர்கள் கண்காணித்து இருக்கிறார் என்று விவரமும் தெரியவந்துள்ளது.

இவர்களுக்கு உதவிகரமாக இருந்த கோவையைச் சேர்ந்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான 3 தீவிரவாதிகளையும் ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் வைத்து உயர அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி: மாலைச்சுடர் (http://www.maalaisudar.com)

5 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

கோவை நண்பர்கள் ஜாக்கிரதையாக இருக்வும் !!

பழமைபேசி said...

மறுபடியுமா? ஊருக்குப் போகலாம்னு இருக்குறேன்....இப்ப இப்பிடியா??

//enRenRum-anbudan.BALA said...
கோவை நண்பர்கள் ஜாக்கிரதையாக இருக்வும் !!
//

யாரோ பதிவரைச் சொல்லுறீங்க போல இருக்கு?!

said...

இப்பத்தான் ஓரளவுக்கு மூச்சுப் பிடிச்சு முன்ன வருது கோவை. மீண்டும் ஒன்றா? கடவுளே தாங்காது.

ராஜ நடராஜன் said...

அடப்பாவிகளா.உங்களை எப்படித்தான் திருத்துவது?

பாலா!பத்திரிகை தகவல் சரியா?கண்ணனூர்,கோழிக்கோடு பகுதிக்கும் காஷ்மீர் தீவிரவாத அளவுக்கு தொடர்புகள் உள்ளன.அதே நேரத்தில் சேட்டன்களின் மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு வேலை தேடும் படலம் கேரளாவிலிருந்து துவங்கி,கோவை,சென்னை,மும்பை வழியாக முடிகிறது.

said...

என்னங்க இது கொடுமையா இருக்கு? இந்தியாவையே சுடுகாடாக்காமல் ஓய மாட்டாங்க போலிருக்கே?

டைனோ

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails